முதல்வர் மு.க.ஸ்டாலின் கை மீது மாஸ்கை வைத்த நடிகர் வாகை சந்திரசேகர்- நெட்டிசன்கள் கண்டனம்
தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பிரபல நடிகரும், முன்னாள் வேளச்சேரி எம்எல்ஏவுமான வாகை சந்திரசேகர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்றார்.
பொதுவாக பதவி ஏற்பவர்களை தமிழக முதலமைச்சரை தலைமைச் செயலகத்தில் தான் சந்திப்பார்கள். ஆனால், வாகை சந்திரசேகர் மீதுள்ள நன்மதிப்பு காரணமாக தன்னுடைய வீட்டுக்கே வர சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சரிடம் ஆசீர் பெறும் பதற்றத்தில், வாகை சந்திரசேகரும் அவருக்கு பூங்கொத்து கொடுக்கும்போது முகத்தில் இருந்த மாஸ்கை கழட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
அப்போது, கழற்றிய மாஸ்க்கை தனது பேண்ட் பாக்கெட்டில் அல்லது சட்டை பாக்கெட்டில் வைக்காமல் கையிலே வைத்து கொடுத்துள்ளார் வாகை. அது அந்த புகைப்படத்திலும் தெள்ளத்தெளிவாக பதிவாகி இருக்கிறது.
மேலும், வாகை சந்திரசேகர் அணிந்திருந்த மாஸ்க் முதலமைச்சர் ஸ்டாலின் கையில் படும் அளவிற்கு மிக நெருக்கமாக அந்த புகைப்படத்தில் காணப்படுகிறது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள், ஒருவர் அணிந்த மாஸ்க்கை மற்றொருவர் தொடக்கூடாது, மாஸ்க் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் தான் முதலமைச்சர் பதவி ஏற்ற நாளில் இருந்து கூறிக்கொண்டு வருகிறார்.
அதை கவனத்தில் கொள்ளாமல், வாகை சந்திரசேகர் இப்படி செய்தது தவறு என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.