மாஞ்சா நூல் அறுத்ததில் கழுத்தில் 16 தையல்கள் - தீவிர சிகிச்சை பிரிவில் இளைஞர்!
tamilnadu-samugam
By Nandhini
திருவொற்றியூரில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவொற்றியூர் கடற்கரை சாலையில் மஸ்தான் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது தனியார் நிறுவன ஊழியர் பரத்திற்கு மாஞ்சா நூல் கழுத்தில் பட்டு கழுத்தை அறுத்துள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த அவருக்கு கழுத்தில் 16 தையல்கள் போடப்பட்டுள்ளன.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.