13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை – தந்தை மீது போக்சோ சட்டம் பாய்ந்தது!

tamilnadu-samugam
By Nandhini Aug 16, 2021 07:16 AM GMT
Report

13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (42). இவர் கூலி தொழிலாளி. இவரது மனைவி ராதா (38). இவர்களுக்கு 13 வயதில் மகள் உள்ளார். இவர்களுடைய மகள் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்நிலையில், நேற்று மதுபோதையில் இருந்த பெரியசாமி, வீட்டில் தனியாக இருந்த தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி ராதா (38), இதுகுறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார், வழக்குப் பதிவு செய்து பெரியசாமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பெரியசாமி, மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

இதனையடுத்து, பெரியசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற மகளுக்கு தந்தையே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை – தந்தை மீது போக்சோ சட்டம் பாய்ந்தது! | Tamilnadu Samugam