ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன் கைது!
சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுநர் போக்சோவில் கைது ஆண்டிபட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலுசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 12ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கும், அனுப்பப்பட்டியை சேர்ந்த அருண்குமார் (23) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஓராண்டிற்கும் மேலாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில், ஆசை வார்த்தை கூறி அருண்குமார் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வந்து பலமுறை சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து வந்தார்.
இதனால், சிறுமிக்கு 2 மாதம் கர்ப்பமானாள். இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. உடனே, இது குறித்து காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் கொடுத்தனர்.
இப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததற்கான முகாந்திரம் இருப்பதை உறுதி செய்த போலீசார் அருண்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.