2 EMI தான்யா கட்டல... என் டிராக்டரை பறிமுதல் செய்யாதீங்க... வங்கி ஊழியரிடம் தனி ஆளாக போராடிய விவசாயி
கொரோனாவால் தவணை கட்ட முடியாத விவசாயியின் டிராக்டரை வங்கி ஊழியர்கள் பறிமுதல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுரேஷ்குமார். இவர் கடந்த 2018ம் ஆண்டு கோட்டாக் மஹிந்திரா வங்கியில் 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று டிராக்டர் வாங்கினார். மூன்று மாதத்திற்கு ஒரு தவணை என 52,000 கட்ட வேண்டும். மொத்தம் 12 மாத தவணையில் 8 மாதம் கட்டியிருக்கிறார்.
கொரனோ காரணமாக கடந்த இரண்டு தவணைகளில் அவரால் கட்ட முடியவில்லை. இதனால் வங்கிக்கு சென்று தவணை கட்டுவதற்கு கால அவகாசம் கேட்டிருக்கிறார். இந்நிலையில், நேற்று விவசாயி சுரேஷ்குமார் வீட்டில் இல்லாத போது, அங்கு வந்த வங்கி ஊழியர்கள் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் டிராக்டரை பறிமுதல் செய்து எடுத்துக் கொண்டு சென்றனர்.
இது குறித்து தகவலறிந்து சுரேஷ்குமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடி சென்று டிராக்டரை மடக்கிப்பிடித்தார். அப்போது, டிராக்டர் முன்பு சுரேஷ்குமார் படுத்துக்கொண்டு போராட்டம் நடத்தினார். பின்னர் அதிகாரிகளுடன் அவர் இரண்டு மாத தவணை மட்டும்தான் கட்ட வேண்டும் என்றும், அதற்காக ஏன் டிராக்டர் பறிமுதல் செய்ய வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார்.
இதனால் இருவருக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஊர் மக்கள் திரண்டதால் டிராக்டரை விட்டுவிட்டு அதிகாரிகள் சென்று விட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஒரத்தநாடு காவல் நிலையத்தில் சுரேஷ் குமார் புகார் கொடுத்தார். கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள இன்னல்களை புரிந்து கொள்ளாமல், இதுபோன்ற மனிதாபிமானம் இல்லாமல் செயல்படும் வங்கிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய அரசு முன்வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ளின் கோரிக்கையாக உள்ளது.
