மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம் - 3வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா கைது!
சென்னை, கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி பள்ளி இயக்கிக் கொண்டு வருகிறது. இந்த நிறுவனராக சிவசங்கர் பாபா இருந்தார். இவர், அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்தது. இந்த வழக்கில், சுமார் 18 முன்னாள் மாணவிகள் அவருக்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவர் மீது பதிந்திருந்த மூன்றாவது வழக்கையும் போக்சோ பிரிவுக்கு மாற்றம் செய்துள்ளனர்.
இந்நிலையில், சிவசங்கர் பாபா மீதான 3-வது போக்சோ வழக்கில் இன்று அவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே, 2 வழக்குகளில் கைதாகி உள்ள சிவசங்கர் பாபா இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.