விவசாய கிணற்றில் மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்த கார் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாப பலி!

samugam
By Nandhini Jul 31, 2021 06:37 AM GMT
Report

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரிலிருந்து நேற்று உஸ்னாபாத் நோக்கி கார் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது.

திடீரென சிகுரு மாமிடி மண்டலம், சின்ன முல்கனூரு என்ற இடத்தில் மின்னல் வேகத்தில் வந்த கார், ஒரு வளையில் கார் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது, சாலையோரம் உள்ள ஒரு ஆழமான விவசாய கிணற்றில் கார் சீறி பாய்ந்து கவிழ்ந்து விழுந்தது.

அப்போது, காரில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச் சென்று பார்த்தனர். காரில் இருந்தவர்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர்.

உடனே, அவர்களை காப்பாற்ற அங்கிருந்தவர்கள் முயற்சி செய்தனர். அதற்குள் அந்த கார் முழுவதுமாக கிணற்று தண்ணீரில் மூழ்கியது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு கார் மீட்கப்பட்டது. எனினும் காரில் யாரும் இல்லை. இந்நிலையில், உடல்களை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

விவசாய கிணற்றில் மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்த கார் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாப பலி! | Tamilnadu Samugam