எனக்கு உயிரை விட சீரியல்தாம்பா முக்கியம்.... போனில் சீரியல் பார்த்துக்கொண்டே பைக் ஓட்டிய நபர்!
கோவையில் ஒருவர் போனில் சீரியல் பார்த்துக் கொண்டே பைக் ஓட்டும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. வீட்டில் உள்ள பெண்கள்தான் பெண்கள் சீரியல் பார்ப்பதுபோய், தற்போது ஆண்களும் சீரியலை பார்க்கத் தொடங்கி விட்டனர்.
இணையதள வளர்ச்சியால் பணியிடங்கள், பூங்காக்கள், பஸ் பயணம் என எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும் மொபைல் போனில் சீரியல் பார்த்துக் கொண்டு செல்கின்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில், காந்திபுரம் மேம்பாலத்தில் ஆபத்தை உணராமல் போனில் சீரியலை பார்த்த படி ஒருவர் பைக்கை அதிவேகமாக ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இப்படிப்பட்ட நபர்களின் அஜாக்கிரதையான செயல்களால் எதிரே வரும் அப்பாவிகளுக்கும் பேராபத்தை விளைவிக்கும் என்பதை வாகன ஓட்டிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.