சென்னை தலைமை செயலகத்தில் திடீரென தீப்பிடித்து கொளுந்துவிட்டு எரிந்த காரால் பரபரப்பு! போலீஸ் விசாரணை!
சென்னை தலைமை செயலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையின் பின்புறம் வாகனம் நிறுத்தும் இடம் இருக்கிறது.
இங்கு நிறுத்தப்பட்டிருந்த காரில் திடீரென தீ பிடித்து எரிந்தது. காரிலிருந்து புகை வெளியேறுவதை கண்டு பதற்றமடைந்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே, அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீ அணைக்கப்படுவதற்கு உள்ளாகவே கார் கொளுந்து விட்டு எரிந்தது, இதனால், காரின் முன் பக்கம் முழுவதும் எரிந்து சேதமடைந்துள்ளது. போலீசார் அந்த இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தீப்பற்றி எரிந்த கார் யாருடையது என்ற விவரங்கள் தெரியவரவில்லை. இந்த தீ விபத்து எதிர்பாராமல் நடந்ததா? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.