‘என் வாழ்க்கையே சீரழிந்து விட்டதே’ திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை! சோகச் சம்பவம்!
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் துளசிராஜ் (28). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். துளசிராஜ் , நந்தினி என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த மே மாதம் நந்தினியை துளசிராஜ் திருமணம் செய்து கொண்டனர். துளசிராஜ்க்கு குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால், திருமணம் முடிந்து வீட்டு செலவுக்கு சரிவர பணம் தராமல் வந்துள்ளார்.
இதனால், இருவருக்குமிடையே அடிக்கடிக்கு பிரச்சனை வந்துள்ளது. இதனால், கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார் நந்தினி. தன்னுடைய வாழ்க்கை இப்படி சீரழிந்து விட்டதே என்று மனவருத்தத்தில் இருந்த நந்தினி வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இத்தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணமான இரண்டே மாதத்தில் புது மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.