14 வயது சிறுமிக்கு 55 வயது முதியவருடன் திருமணம் நடத்தி வைத்த தாய் - கருக்கலைப்பின் போது அம்பலம்!

tamilnadu-samugam
By Nandhini Jul 20, 2021 07:26 AM GMT
Report

வேலூர், கருகம்பத்தூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை இழந்த நிலையில் 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

அந்த பெண்ணிற்கு 14 வயதில் மகள் உள்ளார். தனது இரண்டாவது கணவருக்காக, தனது மகளை அவரது அண்ணன் லோகநாதன் என்பவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்திருக்கிறார்.

திருமணம் செய்த நபருக்கு வயது 55. அந்த பெண் தன் மகளுக்கு ரகசியமாக அந்த நபருக்கு திருமணத்தை நடத்தி முடித்து வைத்துள்ளார். இந்நிலையில், அந்த சிறுமி தற்போது கருவுற்றுள்ளாள்.

இதனையடுத்து, அந்தக் கருவை கலைக்க அவரது தாயார் அரசு மருத்துவமனைக்கு அச்சிறுமியை அழைத்து சென்றுள்ளார். அந்த சிறுமிக்கு 14 வயதிலேயே 55 வயதான முதியவருடன் திருமணம் செய்து வைத்த தகவல் மருத்துவர்களுக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, மருத்துவர்கள் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வந்து, சிறுமியை அவரது தாயிடம் இருந்து மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து, போலீசார் சிறுமியின் தாய் மற்றும் லோகநாதனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

14 வயது சிறுமிக்கு 55 வயது முதியவருடன் திருமணம் நடத்தி வைத்த தாய் - கருக்கலைப்பின் போது அம்பலம்! | Tamilnadu Samugam