செம்மறி ஆட்டைக் கொண்டு நிலத்தை உழுது களை எடுத்த ஏழை விவசாயி! ஆச்சரியத்தோடு பார்த்த ஊர்மக்கள்!
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஞ்சன். இவர் ஏழை விவசாயி. தன்னுடைய 1 ஏக்கர் நிலத்தில் பருத்தி பயிரிட்டுள்ளார். இந்நிலையில், பருத்தி கொல்லையில் களை அதிகரித்தது.
அவற்றை எடுக்க கூலியாட்களுக்கு ரூ. 7000 ரூபாய் கொடுக்க வேண்டும். ஆனால் ரஞ்சன் மிகவும் ஏழ்மையானவர். அவரால் 7000 ரூபாயை கூலியாட்களுக்கு கொடுக்க வசதி இல்லை. இதனையடுத்து, மனைவி ஜெய்னாபி ஒரு யோசனையை ரஞ்சனுக்கு சொன்னார்.
அதன் பேரில், தங்கள் வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் செம்மறி ஆட்டை கொண்டு பருத்தி கொல்லையில் களை எடுத்தனர்.
செம்மறி கெடாரிக்கு சிறிய அளவிலான கலப்பை ஒன்று கட்டப்பட்டு ஆட்டிற்கு முன்பக்கமாக ரஞ்சனின் மகள் புற்களை நீட்ட அது புற்களை சாப்பிட முன்னேறி செல்லும்போது களையை எடுத்துள்ளனர்.
ஒரு ஏக்கர் நிலத்தை செம்மறி ஆட்டைக் கொண்டு உழுது களை எடுத்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் வியப்படைந்தனர்.