கொட்டித் தீர்த்த மழையில் குளிர்ந்த பாம்பு புற்று! அடுத்து நடந்த ஆச்சரியம்…

tamilnadu-samugam
By Nandhini Jul 20, 2021 05:56 AM GMT
Report

 வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டு வருகிறது. இதனால், ஒரு சில இடங்களில் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, காட்பாடி தாராபடவேடு குறிச்சி நகர் பகுதியில் ஒரு பெரிய பாம்பு புற்று உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், குளிர்ந்த சூழலில் இந்த பாம்பு புற்று மேல் பகுதியில் எண்ணற்ற காளான்கள் முளைத்துள்ளன.

புற்றின் மேல் படர்ந்துள்ள எண்ணிலடங்கா காளான்கள் பார்ப்பதற்கு மல்லிகை பூ பூர்த்ததுபோல் கண்களுக்கு அழகாக காட்சியளிக்கிறது.

இது பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாகவும், ஆச்சரியமாகவும் இருப்பதால், இதை படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது, இந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.   

கொட்டித் தீர்த்த மழையில் குளிர்ந்த பாம்பு புற்று! அடுத்து நடந்த ஆச்சரியம்… | Tamilnadu Samugam