3 வயதில் 3 பதக்கத்தை வென்று உலக சாதனை - தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த சிறுவன்!
மழலை மொழியில் பேசும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சித்தார்த், இரண்டரை வயது இருக்கும்போது, அவரது பெற்றோர் சிலம்பம் மற்றும் யோகாவை சித்தார்த்திற்கு கற்றுக் கொள்வதற்கு மாஸ்டர் முகமது ஜாபீரை அணுகியுள்ளனர். அவரிடம் சிறுவன் சித்தார்த் மிகவும் ஆர்வத்தோடு சிலம்பம் மற்றும் யோகாவை கற்றுக் கொண்டுள்ளார்.
தினமும் இரண்டு வேலையும் யோகா மற்றும் சிலம்பம் செய்து அசத்தி வருகிறார். விளையாட வேண்டிய காலத்தில் இவ்வாறு ஆர்வமாக இருந்ததால், ஆன்லைன் மூலம் 6 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு சிலம்பப் போட்டி சென்னையிலிருந்து நடத்தப்பட்டது.
அந்த போட்டியில் 6 வயது சிறுவர்களுடன் 3 வயது சித்தார்த் போட்டியிட விண்ணப்பித்தார். இந்தப் போட்டியில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலிருந்தும் சுமார் 800 பேர் கலந்து கொண்டனர். 800 பேர் பங்குபெற்ற இந்த போட்டியில் சித்தார்த் தங்கப்பதக்கம் வென்று முதல் பரிசை தட்டிச் சென்றார்.
மேலும், நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்திலும் சித்தார்த் இடம் பெற்றிருக்கிறார். யோகாசனத்தில் முட்டையின் மேல் சமகோணசனம் செய்தும், நிமிடத்தில் பத்து ஆசனம் செய்தும், பதக்கங்கள் வென்றும் சோழரன் புக்சாப் ஆப் வேல்ட்டு ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளார்.
3 வயதில் மூன்று பதக்கங்கள் பெற்ற சித்தார்த்துக்கு பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்து வருகிறார்கள்.