உயிருடன் மீன் தொண்டைக்குள் சிக்கி இளைஞர் பரிதாப பலி!
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர் பெரிய கண்மாயில் பிடித்த கெளுத்தி மீனை வாயில் கவ்விக்கொண்டு அடுத்த மீனை பிடிக்க முயற்சி செய்தார்.
அப்போது, கவ்விக் கொண்டிருந்த கெளுத்தி மீன் துள்ளிக் கொண்டு செல்லும் போது அவர் தொண்டையில் சிக்கியது. அப்போது, அவரால் மூச்சு விட முடியாமல் திணறினார். மூச்சு விட முடியாமல் இளையராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொண்டையில் உயிருடன் மீன் சிக்கி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.