‘காமராஜரின் புகழ் வாழ்க, ராஜீவ் காந்தி வாழ்க’ - தமிழில் பதவியேற்ற விஜய் வசந்த் எம்.பி!
இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதன் பிறகு, இடைத்தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். அப்போது, புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களைப் பிரதமர் மோடி, அறிமுகம் செய்ய முயன்றபோது எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன.
இந்த அமளியால், மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் மறைந்த மாநிலங்களவை எம்.பிக்களுக்கும், ஆளுமைக்கும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிறகு அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மாநிலங்களவை ஒரு மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் தொடங்கியது.
இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், மக்களவை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற விஜய் வசந்த் எம்.பி -ஆக பொறுப்பேற்றார். கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக தமிழில் பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும், பதவியேற்றபின் "பெருந்தலைவர் காமராஜரின் புகழ் வாழ்க, ராஜீவ் காந்தி வாழ்க" என்று கூறினார்.