நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

tamilnadu-samugam
By Nandhini Jul 19, 2021 08:06 AM GMT
Report

கடந்த 2012ம் ஆண்டு நடிகர் விஜய், இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த சொகுசு காருக்கு வணிக வரிதுறையினர் நுழைவு வரி விதித்தனர்.

வரி அதிகமாக இருந்ததால், இதை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், “நடிகர்கள் நிஜ வாழ்விலும் ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி செலுத்துவது நன்கொடை போன்றது அல்ல, நாட்டி ற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு. சமூக நீதிக்கு பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது,” என கண்டனம் தெரிவித்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்து, ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் சுந்தரேஷ், மஞ்சுளா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு விசாரணையில், விஜய்யின் விசாரணையை, வரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! | Tamilnadu Samugam