சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் வீட்டைவிட்டு தப்பியோட்டம்! கைது செய்ய சிபிசிஐடி விரைந்தது!

tamilnadu-samugam
By Nandhini Jul 17, 2021 05:18 AM GMT
Report

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் 18 பேர் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் கொடுத்தனர். இதனையடுத்து, பாபா மீது 3 போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகளுக்கும், ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. வரும் திங்கட்கிழமை முதல் பள்ளி ஆசிரியைகளை விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டது.

இதனையடுத்து, கேளம்பாக்கம் பழனி கார்டனில் உள்ள சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியர்கள் 5 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அளிக்க சென்றபோது அவர் வீட்டை விட்டு தப்பியோடியுள்ள உண்மை தெரியவந்துள்ளது. மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை தர உதவியதாக பள்ளி ஆசிரியைகள் 5 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியை காயத்ரி மற்றும் அங்கு பணிபுரியும் பிரவீனா உள்ளிட்டோர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்க சம்மனை வாங்காமல் தலைமறைவாகி உள்ளனர். சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளதால் அவர்களை கைது செய்ய சிபிசிஐடி விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் வீட்டைவிட்டு தப்பியோட்டம்! கைது செய்ய சிபிசிஐடி விரைந்தது! | Tamilnadu Samugam