60 நொடிகளில் 51 ஸ்பெஷலிஸ்ட் பெயர்கள் கூறிய 5 வயது சிறுமிக்கு உலக சாதனை விருது!
tamilnadu-samugam
By Nandhini
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி 1 நிமிடத்தில் 51 சிறப்பு மருத்துவர்களின் பெயர்களையும், மருத்துவ உபகரணங்களின் பெயர்களையும் கூறி அசத்தியிருக்கிறார்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம் ஆத்தூர் ஊராட்சியை சேர்ந்தவர் பத்மநாபன். இவருடைய மனைவி லாவண்யா.
இவர்களுக்கு நேஹா என்ற மகள் உள்ளார். 1 நிமிடத்தில் 51 சிறப்பு மருத்துவர்களின் பெயர்களை கூறி அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளார்.
மேலும் மருத்துவ உபகரணங்களின் பெயர்களும், 1.22 நொடியில் மரங்களின் அறிவியல் பெயர்களை சொல்லி கலாம்’ஸ் உலக சாதனை விருது பெற்றுள்ளார்.