3000 முத்தங்களால் தமிழக முதல்வரை ஓவியமாக வரைந்த மாணவன் - பெரம்பலூர் எம்.எல்.ஏ ரூ.5 ஆயிரம் வழங்கி பாராட்டு!

tamilnadu-samugam
By Nandhini Jul 17, 2021 04:40 AM GMT
Report

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நரசிம்மனுக்கு இளம் வயதிலிருந்து ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். இதனால், அவர் ஓவியம் கற்று, பல்வேறு படைப்புகளை வரைந்து வருகிறார்.

இந்நிலையில், அண்மையில் தஞ்சை பெரிய கோவில், மற்றும் அப்துல் கலாம் உள்ளிட்டவைகளை மூக்கால் ஒவியமாக வரைந்து அனைவரது பாராட்டைப் பெற்றார்.

இதனையடுத்து, தற்போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உருவப்படத்தை பிக்மன்ட் என்ற கலவை கொண்ட பெயிண்டால் 3000 முத்தங்களால் ஒவியத்தை வரைந்திருக்கிறார். 16 அடி நீளமும், எட்டரை அடி அகலமும் கொண்ட துணியில் முதல்வரின் ஒவியத்தை வரைந்திருக்கிறார்.

இந்த ஓவியம் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை முயற்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாலிகண்டபுரம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை முத்தங்களால் ஓவியமாக வரைந்த கல்லூரி மாணவர் நரசிம்மனுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கி, பாராட்டி மகிழ்ந்தார். 

3000 முத்தங்களால் தமிழக முதல்வரை ஓவியமாக வரைந்த மாணவன் - பெரம்பலூர் எம்.எல்.ஏ ரூ.5 ஆயிரம் வழங்கி பாராட்டு! | Tamilnadu Samugam