15 வயது மகளுடைய தோழிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை! போக்சோ சட்டம் பாய்ந்தது!
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் தஞ்சை தெற்கு அதிமுக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவராகவும் இருக்கிறார். 10ம் வகப்பு படிக்கும் வேல்முருகனின் மகளின் தோழிக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.
தனது மகள் அனுப்புவது போல வாட்ஸ் அப்பில் அந்த மாணவிக்கு குறுந்தகவல்களை அனுப்புவதும், மாணவியின் வீட்டுக்கு சென்று அவருடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க முயற்சி செய்வதுபோல மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் கடந்த வாரம் மாணவியின் வீட்டுக்கு அருகே வாடகைக்கு வீடு எடுத்து குடிபெயர்ந்திருக்கிறார். அந்த வீட்டில் இருந்து கொண்டே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனால், பயந்து போன மாணவி தனது பெற்றோரிடம் இது பற்றி கூறினாள். இதைக் கேள்விப்பட்டதும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வேல்முருகனுக்கு எதிராக புகார் கொடுத்தனர்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வேல்முருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அதிமுக பிரமுகர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.