9-வது மாடியிலிருந்து திடீரென குதித்து அலறிய மனைவி - ஓடி வந்து பிடித்த கணவன் - அடுத்து நடந்த அதிர்ச்சி!
உத்தரபிரதேசம், காசியாபாத் நகரில் உள்ள கிராசிங்ஸ் ரிபப்ளிக் ஏரியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 9வது மாடியில் கணவன், மனைவி வசித்து வந்தனர். ஆனால், கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது.
இதனால், கடந்த 13ம் தேதி அன்றும் இருவருக்குள்ளும் சண்டை பயங்கரமாக வெடித்துள்ளது. இதனால், கணவன் மீதுள்ள ஆத்திரத்தில் தற்கொலை செய்துகொள்ளப்போகிறே என்று சொல்லிவிட்டு 9-வது மாடியில் குதிக்க முயன்றி செய்துள்ளார்.
உடனே கணவன் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்து, குதிக்கப்போன மனைவியின் கைகளை பிடித்துக்கொண்டார்.
தற்கொலை செய்ய குதித்துவிட்ட மனைவிக்கும் அப்போது உயிர் மீது பயம் வந்துவிட்டது. எப்படியாவது... என்னை காப்பாற்றுங்க... என்று கணவனை பார்த்து கத்தியுள்ளார். இதனால் அலறி சத்தம் போட்டுள்ளார்.
திடீரென சத்தம் போட்டதால் குடியிருப்பின் எதிர் பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த மனைவியை மேலே தூக்க கணவன் பலத்த முயற்சி செய்தார். ஆனால், பிரயோசனம் இல்லாமல் போனது. கை நழுவி விட்டது.
அலறிக்கொண்டே 9வது மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார் அப்பெண். தலையில் பலத்த அடிபட்டுள்ளதால் ஆபத்தான நிலையில் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்தரத்தில் தொங்கி சத்தம் போட்டபோது சிலர் செல்போனில் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.