ஒலிம்பிக் வீரர்களுக்காக ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட ‘ஹிந்துஸ்தானி வே” பாடல் வேற லெவலில் ட்ரெண்ட்டானது!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் பாடல் வெளியானது. கடந்த ஆண்டு 2020ம் ஆண்டு கொரோனா பரவல்காரணமாக ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.
இதனையடுத்து, இந்த ஆண்டு ஜூலை 23ம் தேதி தொடங்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உலகெங்கிலும் உள்ள வீரர் வீராங்கனைகள் டோக்கியோவுக்கு செல்ல இருக்கிறார்கள்.
இந்தியாவைப் பொருத்தவரை, 18 போட்டிகளைச் சேர்ந்த 126 வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கும் வீரர் வீராங்கனைகளுக்கு நாடெங்கிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அந்த வரிசையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் மற்றும் பாடகி அனன்யா பிர்லா ஆகியோர் இணைந்து ‘ஹிந்துஸ்தானி வே’ என்ற பாடலை இயற்றியுள்ளனர்.
இந்தப் பாடல் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் டீசர் கடந்த ஜூலை 9ம் தேதி வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து, முழு பாடல் நேற்று வெளியானது. ஒலிம்பிக் செல்ல இருக்கும் இந்திய அணிக்கான அதிகாரப்பூர்வ ‘Team India Cheer Song’ ஆக இந்த பாடலை இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்திருக்கிறது.
இதே போல, ஏற்கனவே இந்திய அணிக்கான அதிகாரப்பூர்வ ஒலிம்பிக் பாடல் கடந்த வாரம் வெளியானது. ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்திய அணியைச் வீரர் வீராங்கனைகள் பதக்கங்களை வென்று வர அனைவரும் உற்சாகம் அளித்து வருகிறார்கள்.
Hindustani Way is out now on all platforms!!! Let’s cheer our olympians!! @arrahman @WeAreTeamIndia #HindustaniWay #Cheer4India https://t.co/M6qjt0Lo0Y pic.twitter.com/6P9KThLgK4
— Ananya Birla (@ananya_birla) July 14, 2021