மர்மமான முறையில் மனித எலும்புக் கூடுகள் கிடந்ததால் மக்கள் அதிர்ச்சி! போலீஸ் தீவிர விசாரணை
கொடைக்கானல் கீழ்பூமி நீர்ப்பிடிப்பு பகுதியில் மனித எலும்பு கூடுகள் கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்பூமி நீர் பிடிப்பு பகுதிகளில் மனித எலும்பு கூடுகள் கிடந்ததைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து, அப்பகுதி மக்கள் கொடைக்கானல் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த தகவலையடுத்து, அங்கு விரைந்து வந்த போலீசார் மனித எலும்பு கூடு கிடந்த இடத்தை பார்வையிட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அருகே உள்ள தனியார் பள்ளியில் அறிவியல் அரங்கத்திலிருந்து பள்ளி ஊழியர்கள் குப்பையில் கொட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, கொடைக்கானல் போலீசார் தனியார் பள்ளியை பார்வையிட்டனர்.
இது குறித்து பள்ளி ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் கொட்டப்பட்டிருந்த மனித எலும்பு கூடுகள் நகராட்சி ஊழியர்களால் தற்போது அகற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.