பெண்ணை வசியம் செய்ய... சுடுகாட்டில் உள்ள மனித எலும்புகளை வைத்து மந்திரம் செய்த இளைஞன்! அடுத்து நடந்த சம்பவம்!

tamilnadu-samugam
By Nandhini Jul 14, 2021 09:45 AM GMT
Report

தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி நகரைச் சேர்ந்தவர் முரளி (30). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

முரளி அவ்வப்போது செல்போனில் பெண்களிடம் அதிகமாக பேசுவதை வழக்கமாக வைத்து வந்தார். அவ்வாறு செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டதில், ராங்கால் மூலம் நல்கொண்டா மாவட்டம், குண்டலப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் தொடர்பு கிடைத்தது. அந்த பெண்ணிடம் முரளி 3 மாதமாக செல்போனில் நண்பராக பேசி வந்தார்.

இதனையடுத்து, இருவரும் நேரில் சந்தித்து பேச முடிவு செய்தார்கள். அப்போது அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் ஆன விஷயம் முரளிக்கு தெரிந்தது.

இதனையடுத்து, கணவரை விட்டுவிட்டு தன்னுடன் வந்துவிடுமாறு அப்பெண்ணிடம் கூறி இருக்கிறார். ஆனால், அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் கோபம் அடைந்த முரளி, அந்தப் பெண்ணை வசியப்படுத்த திட்டமிட்டுள்ளார். பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் வசியப்படுத்துவது எப்படி? என்று வீடியோக்களை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து, அவர் வசிக்கும், அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் உள்ள எலும்புகளை தேடிக் கண்டுபிடித்துள்ளார்.

எலும்புகளுடன், வசியம் செய்ய தேவையான பொருட்களை எடுத்துச் சென்று அந்தப்பெண்ணின் வீட்டு முன்பு அமர்ந்து சூனிய பூஜை நடத்தி இருக்கிறார்.

காலையில் கதவை திறந்து பார்த்தபோது வீட்டின் முன்பு பூஜை பொருட்கள் இருப்பதை பார்த்து அப்பெண் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அப்பெண் விசாரித்த போது, முரளி தான் அதை செய்துள்ளார் என்ற விஷயம் தெரியவந்ததும், உடனடியாக காவல்நிலையத்தில் அப்பெண் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில், முரளியை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.   

பெண்ணை வசியம் செய்ய... சுடுகாட்டில் உள்ள மனித எலும்புகளை வைத்து மந்திரம் செய்த இளைஞன்! அடுத்து நடந்த சம்பவம்! | Tamilnadu Samugam