‘தயவு செய்து இந்த நாடகத்தை முதலில் நிறுத்திக்கொள்ளுங்கள்’ - நீட் விவகாரத்தில் திமுக அரசை விளாசித் தள்ளிய காயத்ரி ரகுராம்
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வால் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவர் கனவும், எதிர்காலமும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துக் கொண்டு வருகிறது.
இதனால், தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வை மேற்கொள்ள அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.
இதன் படி, நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கருத்து தெரிவிக்கலாம் என இக்குழு அறிவித்தது.
சுமார் 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வுக்கு எதிராகவும், ஆதரவாகவும் தங்களது கருத்துகளை சொல்லியுள்ளனர். ஏ.கே. ராஜன் குழு அமைத்ததை எதிர்த்து பாஜகவைச் சேர்ந்த கரு.நாகராஜன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து, இன்று காலை 165 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தனர்.
இந்நிலையில், நீட் தேர்வு குறித்த ஆய்வு அறிக்கையை ஏ.கே. ராஜன் குழு சமர்பித்ததை குறிப்பிட்டு, திமுக அரசை நடிகையும், பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சனம் செய்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில், “இந்த நாடகத்தை நிறுத்துங்கள். DMK மாணவர்களை தவறாக வழிநடத்துவதோடு, பரீட்சைக்கு ஊக்குவிக்கவில்லை,” என பதிவு செய்துள்ளார்.