2 பெண் குழந்தையின் தலையை சுவரில் இடித்து தாக்கிய கொடூர தந்தை!
ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரசாத். இவர் தன்னுடைய மனைவி மற்றும் முதல் குழந்தை ஸ்ரீ (5), இரண்டாவது குழந்தை பிரணவி (2) ஆகியோருடன் வசித்து வந்தார்.
பிரசாத்துக்கு ஆண் குழந்தை இல்லை என்ற ஏக்கம் பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. அதனால், மனைவி ஒவ்வொரு முறை கர்ப்பிணியாக இருக்கும்போதும் ஆண் குழந்தைக்காக ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருப்பாராம்.
ஆனால், மனைவிக்கு இரண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் மிகவும் மனவேதனை அடைந்துள்ளார் பிரசாத். அந்த இரு பெண் குழந்தைகளை பார்க்கும்போது திட்டிக்கொண்டே இருந்ததால், அடிக்கடிக்கு மனைவிக்கும், பிரசாத்துக்கும் இடையே சண்டை வந்துள்ளது. இதனால், பிரசாத் மனைவியிடம் விவாகரத்து கூட கேட்டிருக்கிறார்.
இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு தாத்தா பாட்டி வீட்டில் 2 பெண் குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அன்று இரவு வீட்டிற்கு வந்த பிரசாத், குழந்தைகளை பார்த்தவுடன் கோபம் அடைந்துள்ளார்.
கோபம் தலைக்கேறிய பிரசாத் இரண்டு பெண் குழந்தைகளையும் சரமாரியாக அடித்துத் தாக்கினார். குழந்தைகன் தலையை சுவரில் வைத்து முட்டி தள்ளி, அடித்து உதைத்தார். இந்தத் தாக்குதலில் அவரின் இரண்டு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
மற்றொரு குழந்தை மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குற்றவாளியான உடனே பிரசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.