பட்... பட்... என வெடித்து சிதறிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் - 50 கொரோனா நோயாளிகள் உடல் கருகி பலி! ஆத்திரத்தில் வானங்களை அடித்து நொறுக்கிய மக்கள்
ஈராக் நாட்டின் தலைநகரம் சிரியாவில் உள்ள அல் ஹூசைன் மருத்துவமனையில் தான் இந்த கோர சம்பவம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் இந்த மருத்துவமனை 70 படுக்கைகள் கொண்ட இந்த புதிய வார்டனை திறந்தது.
இந்த புதிய வார்டில் 63 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். திடீரென நேற்று இரவு மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் டேங்க் வெடித்து சிதறியது.
இந்த பயங்கரமான தீ விபத்தில் 50 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 63 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது வரைக்கும் 50 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தீ விபத்தில், உடல் கருகி பலியானவர்களின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தியதால் போலீசார் அவரை கட்டுப்படுத்தி கூட்டத்தை கலைத்தனர்.
அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பொதுமக்கள் போலீசாரின் வாகனங்களை அடித்து நொறுக்கினர். வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தி தீக்கிரையாக்கினர்.
இந்த கோர விபத்தையடுத்து, மருத்துவமனையின் தலைமை நிர்வாகியை கைது செய்ய பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் தலைநகர் பாக்தாத்தில் அமைந்துள்ள மருத்துவமனையில் இதேபோன்று ஆக்சிஜன் டேங்க் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 82 கொரோனா நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்தது. குறிப்பிடத்தக்கது.