தண்ணீர் குடிக்கும்போது பல் செட்டை விழுங்கிய பெண்- பரிதாபமாக இறந்த சம்பவம்!
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (48). இவருடைய மனைவி ராஜலட்சுமி (43). கடந்த வாரம் ராஜலட்சுமி அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று புதிதாக மூன்று பற்களை கட்டி வந்துள்ளார்.
நேற்று அவர் வீட்டில் தண்ணீர் குடிக்கும் போது அந்த 3 பற்களில் ஒரு பல் கழன்றதால் தன்னை அறியாமல் அவர் அதனை விழுங்கி இருக்கிறார்.
ராஜலட்சுமி இதனை சுரேஷிடம் தெரிவித்தார். உடனே அவர் தனியார் மருத்துவமனைக்கு ராஜலட்சுமியை அழைத்துச் சென்றார். அப்போது மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தனர். அதில் பல் செட் இருப்பது போன்று எதுவும் தெரியவில்லை.
ஆனால் அவருக்கு வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்பட்டதால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சுரேஷ் அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால், செல்லும் வழியிலேயே ராஜலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் ராஜலட்சுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.