மிக்ஸர் சாப்பிட்ட 5 வயது சிறுமி - தொண்டையில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்!
திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ராகேஷ். இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவருடைய மகள் நிவேதிதா. ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நிவேதிதா மிக்ஸர் சாப்பிட்டுக் கொண்டார்.
அப்போது, மிக்ஸர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென சிறுமியின் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டது. இதனால், மூச்சு விட முடியாமல் திணறியுள்ளார் நிவேதிதா. இதனால், சிறுமி மயங்கி விழுந்துள்ளார்.
இதைப் பார்த்த பெற்றோர்கள் நிவேதிதாவை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சிறுமி இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
மகளின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் கதறித் துடித்தார் ராகேஷ். மிக்சர் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.