அசாம் மாநில சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொலை! கூட இருந்தவர்களே பழி வாங்கிய கொடூரம்!
அசாம் மாநிலத்தின் சந்தன கடத்தல் வீரப்பன் என்று அழைக்கப்படும் மங்கின் கல்ஹாவ் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, ஐக்கிய மக்கள் புரட்சி முன்னணி இயக்கம் முடிவுக்கு வந்துவிட்டதாக அசாம் மாநில போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அசாம் மாநிலத்தில் ஐக்கிய மக்கள் புரட்சி முன்னணி என்ற இயக்கத்தை நடத்தி வந்தவர்தான் மங்கின் கல்ஹாவ். இவர்தான் அந்த இயக்கத்தின் தலைவர்.
இவர் அம்மாநிலத்தின் தெற்கு மலைப்பகுதிகளில் பதுங்கி இருந்து சந்தன மரங்கள் மற்றும் மிகவும் அரிய வகை மரங்களை வெட்டி கடத்தி வந்தார். இதனால், அவரை அசாம் மாநிலத்தின் சந்தன கடத்தல் வீரப்பன் என்று அழைக்கப்பட்டு வந்தார். இந்த அமைப்பை சேர்ந்த பல்வேறு மூத்த தலைவர்கள் கடந்த சில ஆண்டுகளாக என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டு வந்தனர். மேலும் சில தலைவர்கள் போலீசிடம் சரணடைந்தனர்.
இந்த அமைப்பின் தளபதியாக கருதப்பட்ட மார்ட்டின் குயிட்டி என்பவர் கடந்த ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கெங்பிபுங் பகுதியில், ஐக்கிய மக்கள் புரட்சி முன்னணிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது, ஒருவருக்கு ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர்.
இதில் மங்கின் கல்ஹாவ் மீது அவரது சகாக்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே, அங்கு விரைந்து சென்ற போலீசார் மகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, ஐக்கிய மக்கள் புரட்சி முன்னணி இயக்கம் தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக அசாம் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.