மனைவி சொன்ன அந்த ஒரு வார்த்தை! மனமுடைந்த கணவன் எடுத்த முடிவு! நடந்தது என்ன?

tamilnadu-samugam
By Nandhini Jul 12, 2021 09:57 AM GMT
Report

கோவையைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகன் ரஞ்சித்குமார் (27). இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு மடியாடா என்ற கிராமத்தை சேர்ந்த ஆர்த்தி (21) என்பவருக்கும் கடந்த மே மாதம் 23ம் தேதி திருமணம் நடந்தது. பின்னர் இருவரும் கோவைக்கு வந்து குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த வாரத்தில் ஆர்த்தி, எனக்கு பெற்றோர் நினைவாகவே இருக்கு, அவர்களை பார்க்க வேண்டும் போல உள்ளது என கணவரிடம் கூறியுள்ளார். உடனே, ரஞ்சித்குமார் தனது மனைவியை அவருடைய பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும் ஆர்த்தி, நான் இங்கு ஓரிரு நாட்கள் தங்கிவிட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார்.

இதனால், அவர் தனது மனைவியை அங்கு விட்டுவிட்டு கோவைக்கு திரும்பிவிட்டார். பின்னர் ஆர்த்தி தனது கணவருக்கு போன் செய்து தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். இவரும், மனைவி கூட்டதும் அங்கு சென்றுள்ளார். பின்னர், அவர் தனது மனைவியிடம் கோவைக்கு செல்லலாம் என்று கூறியுள்ளார். அதற்கு ஆர்த்தி, தனது பெற்றோரை விட்டு பிரிந்து என்னால் வர முடியாது என்று கூறினாள்.

உங்களுடன் இனி என்னால் வாழ முடியாது என்று கூறியுள்ளாள். அந்த வார்த்தையை கேட்டு மனமுடைந்த ரஞ்சித்குமார், மனமுடைந்து வீட்டிற்கு திரும்பினார். வீட்டிற்கு வந்தவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். வெகுநேரம் ஆகியும் இவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம், பக்கத்தினர் வீட்டிற்குள் நுழைந்து பார்த்தனர்.

ரஞ்சித்குமார் மயக்கமடைந்து, வாயில் நுரை தள்ளியபடி கீழே விழுந்து கிடந்துள்ளார். உடனே, அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். மருத்துவமனையில், ரஞ்சித்குமார் சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புகார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மனைவி சொன்ன அந்த ஒரு வார்த்தை! மனமுடைந்த கணவன் எடுத்த முடிவு! நடந்தது என்ன? | Tamilnadu Samugam