என்ன மனுஷன்ய்யா... சொந்த செலவில் சாலையை சீரமைத்த காவல்துறை அதிகாரி!
இந்தியாவில் சாலைகள் எங்கும் குண்டும் குழியுமாகதான் இருக்கிறது. இது ஒன்று புதிது கிடையாது. சாலைகளை சீரமைக்க அரசாங்கமே முன்வராத போது மைசூரை சேர்ந்த காவல்துறை உதவி துணை ஆய்வாளர் எஸ். துரை சுவாமி என்பவர் முன்வந்து சாலைகளை சீரமைத்துள்ளார்.
தற்போது சமூகவலைத்தளத்தில் இவருக்கு பாராட்டு குவிந்து வருகின்றன. எச்.டி. கோடே தாலுகாவில் மடபுராவிற்கும் கே.பெலட்டூருக்கும் இடையே சுமார் ஒரு 5 கி.மீ தூரத்தில் இருக்கும் சாலை மோசமாக நிலையில் இருந்துள்ளது.
அப்பகுதி மக்கள் பலமுறை இதனை அதிகாரிகள் எடுத்துச் சொல்லும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனையடுத்து, பொதுமக்கள் துரைசுவாமியிடம் கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட துரைசுவாமி தனது மனைவியுடன் சேர்ந்து ரூ.3 லட்சம் பணத்தை ரக்ஷனா சேவா அறக்கட்டளைக்கு கொடுத்தார். இதுமட்டுமல்லாமல், சாலையை சரிப்படுத்தும் பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இது குறித்து துரைசுவாமி பேசுகையில், 30க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்தவர்கள் இந்த சாலையில் சென்றுக்கொண்டு வருகிறார்கள். பொதுமக்களம், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் இது குறித்து எங்களிடம் தெரிவித்தார்கள். உடனே சாலையை சீரமைக்க உதவி செய்தேன் என்றார். அப்பகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் துரைசுவாமி தாய், தந்தையை இழந்த 2 குழந்தைகளை தத்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.