35 அழகான மயில்களுக்கு உணவில் விஷம் வைத்து கொன்ற கொடூர விவசாயி!

tamilnadu-samugam
By Nandhini Jul 12, 2021 07:59 AM GMT
Report

திருப்பூர் மாவட்டம், பொல்லிகாளிபாளையம் பகுதியில் ஒரு விவசாய தோட்டத்தில் கடந்த 9ம் தேதி 24 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு, விசாரணைக் குழுவோடு இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மறுபடியும், அதே இடத்தில் 10 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

மொத்தம் 35 மயில்கள் இறந்து கிடந்ததையடுத்து, அரசு கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு இறந்த போன மயில்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த மயில்களை அங்கேயே எரிக்கப்பட்டது.

குற்றவாளியை கண்டுபிடிக்க, அமராவதி வனச்சரக அலுவலகத்தில் இருந்து மோப்ப நாய் ஒன்று வரவழைக்கப்பட்டது.

அந்த மோப்ப நாய் வந்ததும் மயில்கள் இறந்து கிடந்த இடத்திலிருந்து ஒரு தோட்டம் வரைக்கும் ஓடி சென்று நின்று விட்டது. அந்த இடத்தில் ஒரு மயில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது இதைப் பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருபவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த விவசாயி கூறுகையில், அந்த தோட்டத்தில் அதிக அளவில் மயில்கள் வந்து விவசாய விதைகளை தின்று விட்டுச் சென்று விடுகிறது.

இதனால், எனக்கு நஷ்டம் ஏற்படுகிறது. அதனால்தான், மயில்கள் சாப்பிடக்கூடிய உணவில் விஷம் கலந்து வைத்து கொன்றேன் என்றான். இதனையடுத்து வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து அவரிடம் போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

35 அழகான மயில்களுக்கு உணவில் விஷம் வைத்து கொன்ற கொடூர விவசாயி! | Tamilnadu Samugam