7 சிறுமிகளை மிரட்டி, செல்போனில் ஆபாச படம் காட்டி பாலியல் வன்கொடுமை: பாஜக பிரமுகர் கைது!
சிறுமிகளுக்கு செல்போனில் ஆபாசப் படத்தை காட்டி, பாலியல் சில்மிஷம் செய்த பாஜக நிர்வாகி தற்போது வசமாக சிக்கியுள்ளார். அவரை குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கோழிகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (60). இவர் பாஜக நிர்வாகியாக உள்ளார்
இவர் கிராமத்தில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 சிறுமிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காண்பித்துள்ளார். அந்த படங்களை சிறுமிகளிடம் காண்பித்து, அதுபோல் தன்னிடம் நடந்து கொள்ளுமாறு செய்யச்சொல்லி மிரட்டியுள்ளார்.
இதனால், சிறுமிகள் அழுதுக்கொண்டே இருந்துள்ளனர். ஏன் அழுதுக்கொண்டே இருக்கிறீர்கள் என்று பெற்றோர்கள் சிறுமிகளிடம் கேட்டதற்கு, சிறுமிகள் பெற்றோர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளனர்.
உடனே இது குறித்து, மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரை பதிவு செய்த போலீசார் மகாலிங்கத்தை கைது செய்தனர்.
குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் விடுத்தல், சிறுமிகளின் பாலியல் இச்சையை தூண்டுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் கீழ் மகாலிங்கத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.