திடீரென குடியரசு துணைத்தலைவரை தனது தங்கையுடன் சந்தித்தார் நடிகர் விஷால் - இதுதான் காரணமாம்?
tamilnadu-samugam
By Nandhini
4 years ago
நடிகராக உள்ள விஷால், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என பன்முகத் திறமைக்கொண்டவர். அதேநேரம் நடிகர் சங்கத்தில் பொறுப்புகளில் இருந்து வருகிறார். சமூக பணிகளில் அக்கறைக்கொண்ட விஷால், கொரோனா நேரத்தில் ஏழை பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தார்.
இந்நிலையில், ஜதராபாத் வந்துள்ள குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடுவை நடிகர் விஷால் தனது தங்கையுடன் சென்று சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சமூகவலைத்தளத்தில் விஷால், குடியரசு துணைத் தலைவரை சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.