மிகவும் ஆபத்தான உருமாறிய ‘லாம்ப்டா’ வைரஸ் - 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவல் - உலக நாடுகளுக்கு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!
கொரோனா 2ம் அலையை அடுத்து, கொரோனா 3வது அலை அக்டோபரில் உச்சத்தை தொடும். ஆதலால், அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, இந்திய உட்பட பல்வேறு நாடுகள் 3வது அலை எதிர்க்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், டெல்டா வகைகளை விட மிகவும் ஆபத்தான உருமாறிய ‘லாம்ப்டா’ என்ற புதிய வைரஸ் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பெரு நாட்டில்தான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் மே மற்றும் ஜூன் மாதங்களில் 82% பேரை தாக்கியுள்ளதாக பான் அமெரிக்க சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் தற்போது இங்கிலாத்திலும் பரவத் தொடங்கியிருப்பதாக இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று இங்கிலாந்து திரும்பி வந்த 6 பேருக்கு இந்த ‘லாம்ப்டா’ வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கிறது.
கடந்த 4 வாரத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த ‘லாம்ப்டா’ வைரல் மிக விரைவில் பல நாடுகளுக்கு பரவக்கூடும் என்றும், அனைத்து நாட்டு மக்களும் முன்னெச்சரிக்கையோடுயும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று உலக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.