என்னை விட்டுவிடுங்க... 16 வயது பெண் கதறியும்... ஆடையில்லாமல் வீடியோ எடுத்து ஊடகத்தில் வெளியிட்ட கொடூரர்கள்!
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 50 வயதான விவிசாயி ஒருவருக்கு 11ம் வகுப்பில் படிக்கும் ஒரு மகள் இருந்தாள். அந்தப் பெண் அதே பகுதியை சேர்ந்த இரு வாலிபர்கள் நண்பர்களாக பழகி வந்தனர். தினமும் நண்பர்களிடம் அவர் வாட்ஸ் அப்பில் மேசேஜ் செய்து வந்தாள்.
இந்நிலையில், அந்த பெண்ணை நண்பர்கள் தனியே சந்திக்க வர சொல்லியுள்ளனர். நண்பர்களை நம்பு அந்தப் பெண்ணும் சந்திக்க சென்றாள்.
அப்போது, நண்பர்களான அந்த இளைஞர்கள் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக கட்டிப்போட்டுள்ளனர். ஆடைகளை உருவி அந்தப் பெண்ணை வீடியோ எடுத்துள்ளனர்.
தன்னை விட்டுவிடுமாறு அப்பெண் கெஞ்சியும், விடிய, விடிய வீடியோ எடுத்துள்ளனர். அது மட்டுமல்லாமல், அந்த இளைஞர்கள் அப்பெண்ணை கதற கதற பாலியல் வன்கொடுமை செய்தனர்.
விஷயத்தை வெளியில் சொன்னால் இந்த வீடியோவை ஊடகத்தில் வெளிவிட்டுவிடுவோம் என்று மிரட்டி அனுப்பினர். அதனால் அந்தப் பெண் இந்த விஷயத்தினை வெளியே சொல்லாமல் மறைத்து வைத்துள்ளாள்.
ஆனால், இரண்டு வாலிபர்களும் சில நாள் கழித்து அந்த வீடியோவை ஊடகத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி பரவியது.
இந்த தகவல் அப்பெண்ணின் தந்தைக்கு தெரியவர, அந்த வீடியோவை அந்தப் பெண்ணின் தந்தை பார்த்துவிட்டார். அதன் பின்னர், மகளை அடித்து உதைத்துள்ளார்.
அப்பெண்ணிடம் தந்தை விசாரித்தபோது, அந்த பெண் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளாள். பிறகு அந்தப் பெண்ணிடம் அவரின் தாயார் தனியாக விசாரித்த போது, அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளாள்.
பின்னர், பெற்றோர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்தப் புகாரை பதிவு செய்த போலீசார், அந்த இளைஞர்களை கைது செய்துள்ளனர். இது குறித்து மேலும் அந்த இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.