பிரபல நடிகர் ராம்கி திடீர் மரணம் - சோகத்தில் ஆழ்ந்தது திரையுலகம்

tamilnadu-samugam
By Nandhini Jul 10, 2021 10:11 AM GMT
Report

ராம்கி என்கிற ராமகிருஷ்ணன் சினிமா மற்றும் சின்னத்திரையில் தன் நடிப்பால் பிரபலமானவர்.

இவர், 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் தன் திறமையை வெளிக்காட்டியுள்ளார். பிரபல தொலைக்காட்சி டிவி தொடர்களிலும் நடித்து வந்தவர் ராம்கி.

குணச்சித்திர மற்றும் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை முத்திரை குத்தி பதித்து வைத்தவர் கடந்த சில நாட்களாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அவர் திடீரென மரணமடைந்துள்ளது தமிழ் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராம்கியின் மறைவிற்கு மேடை நாடகக் கலைஞர்கள், சினிமா மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். 

பிரபல நடிகர் ராம்கி திடீர் மரணம் - சோகத்தில் ஆழ்ந்தது திரையுலகம் | Tamilnadu Samugam