அலற அலற விடாமல் 2 வயது குழந்தையை குதறித் தள்ளிய தெருநாய்கள் - பதற வைத்த அதிர்ச்சி சம்பவம்
கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோபால். இவருடைய மனைவி சின்னம்மா. இந்த தம்பதிகளுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்தது.
நேற்று முன்தினம் கோபால்-சின்னம்மா தம்பதி தங்கள் 2 வயது மகனை குடிசையில் படுக்க வைத்துவிட்டு வேலைக்கு சென்றுள்ளனர்.
பல தெருநாய்கள் நவலூர் ரெயில் நிலையம் அருகே அமைக்கப்பட்ட குடிசை பகுதியில் சுற்றித் திரிந்து வந்தன.
கோபால்-சின்னம்மா வசித்து வந்த குடிசைக்கு அருகே சுற்றித் திரிந்த நாய்கள், திறந்திருந்த குடிசைக்குள் தெருநாய்கள் நுழைந்தன. அப்போது, குடிசைக்குள் படுத்து தூங்கிக்கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தையை தெருநாய்கள் கடித்து குதறியது. வலி தாங்க முடியாமல் குழந்தை அலறி கத்தியுள்ளது.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தினர் குடிசைக்குள் ஓடி வந்தனர்.
குழந்தையை தெருநாய்கள் கடித்து குதறியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் தெருநாய்களை துரத்தி அடித்தனர். தெருநாய்கள் கடித்து குதறியல் அக்குழந்தை பலத்த காயங்களுடன் பரிதாபமாக துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதனையடுத்து, நிலத்தில் வேலை பார்த்த குழந்தையின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். குழந்தையின் பெற்றோர் மற்றும் உடன் வேலை பார்த்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு குடிசையை நோக்கி ஓடி வந்தனர்.
இறந்து போன குழந்தையை பார்த்து பெற்றோர்கள் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களின் மனதை நொறுக்கியது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.