“தமிழக கோயில்களில் 5 ஆண்டு காலமாக வேலைசெய்தவர்களுக்கு பணி நிரந்தரம்” : அமைச்சர் சேகர் பாபு
தமிழக கோயில்களில் 5 ஆண்டு காலமாக தற்காலிகமாக பணிபுரிவர்களின் பணி, ஒரு மாதத்திற்குள் நிரந்தரமாக்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், இது குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது -
தமிழக கோயில்களில் 5 ஆண்டு காலமாக தற்காலிகமாக பணி புரிந்து வந்த பணியாளர்களின் பணி, ஒரு மாதத்திற்கு நிரந்தரம் செய்யப்படும் என்றும், கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்கள், வாடகைக்கு இருப்பவர்கள் அதை ஒத்துக்கொண்டு திருக்கோவிலுக்கு உரிய மனுவினை அளித்தால் அவர்களை வாடகைதாரர்கள் ஆக ஏற்று உத்தரவு வழங்கப்படும்.
கடந்த ஆட்சியில் 10 வருடமாக இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் குடமுழுக்கு மராமத்து பணிகள் நடைபெறாமல் இருந்து வந்துள்ளது.
இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா வைரஸ் பரவி வருவதால் கோயில்களில் அன்னதானம் பொருளாக மட்டுமே வழங்கப்படும். கொரோனா பரவலிலிருந்து விடுபட்டு தமிழக மக்கள் பெற்று நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.