பெண்ணை கடித்துக் கொன்ற நல்ல பாம்பு! மறுபடியும் அதே வீட்டிற்கு வந்த நல்ல பாம்புக்கு நடந்த விபரீதம்!
பாலக்கோட்டை அடுத்த வாழைத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் இருவரும் விவசாயம் செய்து வந்தனர்.
இவர்கள் வீட்டின் ஓரத்தில் உரமூடை வைத்திருந்தனர். அந்த உரமூடையில் நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது.
உரமூடை அருகே செல்வராணி வந்தபோது, இந்த நல்ல பாம்பு திடீரென செல்வராணியை கடித்துவிட்டு ஓடி பதுங்கி விட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.
அப்போது செல்வராணியை பாம்பு கடித்ததைப் பார்த்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால், செல்வராணி சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்தகவலையடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
பாலக்கோடு போலீசார் பெருமாள் வீட்டுக்கு வந்தனர். அங்கு போலீசார் விசாரித்து கொண்டிருந்த போது செல்வராணியை கடித்த அதே பாம்பு மீண்டும் பெருமாள் வீட்டுக்கு வந்தது.
உடனே அந்த பாம்பை அங்கிருந்தவர்கள் அடித்துக் கொன்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.