மணக்கோலத்தில் மண்டப வாசலில் காத்திருந்த திருமண ஜோடிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

By Nandhini Jul 09, 2021 07:15 AM GMT
Report

மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வரான நாளிலிலிருந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதற்காக ஒவ்வொரு பகுதிக்கு அடிக்கடிக்கு சென்று நேரில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்று திருவாரூரிலிருந்து காரில் திருக்குவளை நோக்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது காரில் விரைவாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது, திருவாரூர் பின்னவாசல் மெயின்ரோடு பகுதியில் சென்றபோது அங்கு உள்ள ஒரு திருமண மண்டப வாசலில் மாவூரை சேர்ந்த சோப்ரா-ரமா ஆகிய ஜோடிகள் மணக்கோலத்தில் முதலமைச்சரை பார்ப்பதற்காக நின்று காத்துக்கொண்டிருந்தனர்.

காரில் செல்லும்போது தமிழக முதல்வர் மணக்கோலத்தில் நின்ற ஜோடியை பார்த்தார். உடனே தனது காரை நிறுத்தச் சொல்லி, மணமக்களை அழைத்து பேசினார். அப்போது அந்த ஜோடியினர், உங்கள் தலைமையில் எங்கள் திருமணம் நடைபெற வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

அதற்காக உங்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தோம் என்று தெரிவித்தனர். உடனே, காரை விட்டு கீழே இறங்கிய முதல்வர் மு.கஸ்டாலின் திருமாங்கல்யத்தை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

மணமக்களையும் வாழ்த்தி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இந்த சம்பவங்கள் அங்கு கூடி இருந்தோரை நெகிழ வைத்தது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

மணக்கோலத்தில் மண்டப வாசலில் காத்திருந்த திருமண ஜோடிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்! | Tamilnadu Samugam