என்னது... ஏசியின் விலை வெறும் 5, 900 ரூபாய் தானா? அமேசான் ஆஃபரை பார்த்து அதிர்ந்து போன வாடிக்கையாளர்கள்!

tamilnadu-samugam
By Nandhini Jul 08, 2021 12:46 PM GMT
Report

அமோசான் நிறுவனத்தில், ஒரு ஏ.சியின் விலை ரூ.5,900-க்கு விற்பனை என்று அறிவித்த நிலையில், வாடிக்கையாளர்கள் ஆச்சரியமடைந்து ஆடர்களை குவிக்கத் தொடங்கினர்.

தற்போது, கொரோனா காலம் என்பதால் மக்கள் ஆன்லைன் வர்த்தகத்தை உபயோகித்து வருகின்றனர். ஆடைகள் முதல் எலக்ட்ரானிக் ஐட்டம் வரை அனைத்துப் பொருட்களும் அமேசானில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

கடந்த நாட்களுக்கு முன்பு டோஷிபா 2021 மாடல் ஏசியின் மதிப்பான ரூ.96,000-க்கு பதில் ரூ.5,900-க்கு விற்பனை என அறிவித்தது மக்கள் அனைவருக்கும் ஒரே ஆச்சரியம். இதனையடுத்து, ஏ.சி.யை வாங்க முண்டியடித்துக் கொண்டு ஆர்டர்களை குவிக்கத் தொடங்கினர்.

என்னடா இது…? இவ்வளவு ஆர்டரா என அமேசான் உஷாரான பிறகு தான், அமேசான் நிறுவனம் விசாரித்து பார்த்தது.

அப்போதுதான் தெரிந்தது, ரூ.5,900 தள்ளுபடி என பதிவிடாமல், ரூ.5,900க்கு விற்பனை என தவறாக பதிவிட்டு அமேசானில் வெளியிட்டுள்ளனர். ரூ.96,000 ஏசி 94% தள்ளுபடியில் பட்டியலிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தனது தவறை ஒப்புக்கொண்டு, ஏசியின் விலையை திருத்தி மீண்டும் ரூ.90,800-க்கு விற்பனை என அறிவித்துள்ளது.

ரூ.5,900-க்கு ஏசியை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் பலரும் அமேசான் செய்த விலை மாற்றத்தால் கண்டு அதிர்ச்சியும், வருத்ததிற்குள்ளானர்கள்.   

என்னது... ஏசியின் விலை வெறும் 5, 900 ரூபாய் தானா? அமேசான் ஆஃபரை பார்த்து அதிர்ந்து போன வாடிக்கையாளர்கள்! | Tamilnadu Samugam

என்னது... ஏசியின் விலை வெறும் 5, 900 ரூபாய் தானா? அமேசான் ஆஃபரை பார்த்து அதிர்ந்து போன வாடிக்கையாளர்கள்! | Tamilnadu Samugam