நித்தியானந்தம் தான் என் சாவுக்கு காரணம்.... போலீசாரிடம் சிக்கிய உருக்கமான கடிதம்!
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமரவேல். இவரின் மகள் நர்மதா. இவர் தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
தந்தை குமரவேல் இறந்துவிட்டதால் தாயார் ஜோதியுடன் பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், பாட்டி வீட்டில் இருந்த சமயத்தில் நர்மதாவிற்கு, நித்தியானந்தம் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.
இதனால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். தனிமையில் இருக்கும் போதெல்லாம் திருமணம் செய்து கொள்கிறேன் என்று நர்மதாவிற்கு ஆசை வார்த்தை கூறி வந்துள்ளார் நித்தியானந்தம். திடீரென நர்மதா கர்ப்பமானார். இந்த தகவல் நர்மதாவின் குடும்பத்திற்கு தெரியவந்தது. இதற்கு மேலும் வேறு வழியில்லை என்று நினைத்த நர்மதா, நித்தியானந்தம் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நித்தியானந்தனிடம் பேசியுள்ளார் நர்மதா. ஆனால், அதற்கு நித்தியானந்தம் மறுப்பு தெரிவித்துள்ளார். நர்மதாவின் கருவை கலைத்து விடவும் கூறியுள்ளார். இதைக்கேட்ட நர்மதா மிகவும் மனமுடைந்து போனார்.
இதனால், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தற்கொலைக்கு முன்னர் ‘என் சாவுக்கு நித்தியானந்தன் தான் காரணம்’ என்று கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்தக் கடிதத்தை கைப்பற்றிய திருவெண்ணெய் நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, நித்தியானந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.