அலறி துடிக்க துடிக்க பெண்ணின் உடையை உருவி மந்திரவாதி செய்த கொடூர செயல்! அதிர்ச்சி சம்பவம்!
உத்தரபிரதேசம், மீரட் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் கடுமையாக நோய்வாய்ப்பட்டு உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளாள்.
இதனால் அந்த பெண்ணுக்கு பல மருத்துவரிடம் சிகிச்சை கொடுத்தும் அப்பெண்ணுக்கு உடல்நிலை சரியாகவில்லை.
இதனால், பவான்பூரில் வசிக்கும் தாரிக் என்பவர், அந்த பெண்ணின் பெற்றோரிடம், ரஷீத் நகரில் வசிக்கும் அப்சால் மாலிக் என்ற ஒரு மாந்த்ரீகம் செய்யும் நபரை அறிமுகம் செய்து வைத்தார். அப்சால் மூலம் தங்கள் மகளை குணப்படுத்த முடியும் என்று தாரிக் பெற்றோரிடம் நம்பிக்கை கூறினார்.
தன்னுடைய பெண் குணமாகிவிடுவாள் என்ற எண்ணத்தில் அவர்கள் அந்தப் பெண்ணை ஜூலை 5ம் தேதி அப்சாலிடம் அழைத்துச் சென்றனர். அப்சாலிடம், தாரிக், அப்சாம் மற்றும் சுல்பிகர் ஆகியோர் தாந்த்ரீக திறன்களைக் கற்றுக் கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், சம்பவத்தன்று அப்பெண்ணை மாந்தீரிகம் செய்கிறோம் என்று கூறி 3 பேரும் சேர்ந்து அப்பெண்ணை துடிக்க துடிக்க பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். வலியால் அப்பெண் கத்தியும், விடாமல் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனையடுத்து, அந்த பெண் தனக்கு நேர்ந்த பலாத்கார கொடுமையை தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளாள். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.