உலகிலேயே மிக குள்ளமான அதிசய பசுமாடு கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது! ஆர்வமுடன் பார்த்துச் செல்லும் மக்கள்!

tamilnadu-samugam
By Nandhini Jul 08, 2021 09:41 AM GMT
Report

உலகிலேயே மிக குள்ளமான 51 செ.மீட்டர் உயரம் கொண்ட அதிசய பசுமாட்டை காண்பதற்காக ஏராளமானோர் சாரிகிராமில் குவிந்து வருகின்றனர். வங்காள தேசத்தில் டாக்காவில் உள்ள சாரிகிராமில், ஷிகோர் என்பவருக்கு சொந்தமான பண்ணை ஒன்று உள்ளது.

இந்த பண்ணையில் 51 சென்டிமீட்டர் நீளம் கொண்ட பசு ஒன்று பிறந்துள்ளது. இதன் எடை 26 கிலோ கிராம் மட்டுமே. இந்த பசு உலகின் மிகக் குள்ளமான பசு என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

கேரளாவை சேர்ந்த மாணிக்யம் என்னும் பசு தான் உலகின் குள்ளமான பசு என்று கின்னஸ் உலக சாதனையில் கடந்த 2014ம் ஆண்டு இடம்பெற்றது. கேரளாவில் பிறந்த இந்தப் பசுவின் உயரம் 61 சென்டி மீட்டராக இருந்தது.

ஆனால் வங்காள தேசத்தில் பிறந்த ராணி பசுவின் உயரம் 51 சென்டிமீட்டர் மட்டும்தான். இதனால், இந்த பசு உலகின் மிக குள்ளமான பசு என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த சமூகவலைத்தளங்களில் பரவியதும், இந்த பசுவைப் பார்க்க ஏராளமான மக்கள் அந்த பண்ணையில் குவிந்து வருகின்றனர்.

 பசுவை பார்த்து ரசிக்கவும், செல்பி எடுக்கவும் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வருகின்றனர்.

கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து வருவதால் அத்தனை பேரையும் அனுமதிக்க வேண்டாம் என்று பண்ணையின் உரிமையாளருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஆனாலும் இந்த தடைகளை எல்லாம் மீறி பொதுமக்கள் ஆர்வத்துடன் பண்ணைக்கு வந்த அந்த அதிசய பசுகை பார்த்துவிட்டு செல்கின்றனர். 

உலகிலேயே மிக குள்ளமான அதிசய பசுமாடு கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது! ஆர்வமுடன் பார்த்துச் செல்லும் மக்கள்! | Tamilnadu Samugam

உலகிலேயே மிக குள்ளமான அதிசய பசுமாடு கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது! ஆர்வமுடன் பார்த்துச் செல்லும் மக்கள்! | Tamilnadu Samugam