இளையராஜாவின் சொந்தக் காரப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! நடந்தது என்ன?
தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவி ஜீவாவின் அண்ணன் மகள் விலாசினி. இவர் பாடகியாகவும், நடிகையும் ஆவார். தொகுப்பாளினியாகவும் இருந்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாவம் கணேசன்’ தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் விலாசினி. இவரின் திருமணம் மிக பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இளையராஜா நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி திருமணத்தை நடத்தி வைத்தார்.
திருமணத்திற்கு பிறகு கணவனின் கொடுமை தாங்காமல் அவரை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்ததாகவும். அதனால் தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் அவர் தொல்லை கொடுத்து வருகிறார் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார் விலாசினி.
இது குறித்து, அவர் ஒரு பேட்டி அளிக்கும்போது,
தான் கருப்பாக இருப்பதால் பிரபல தொலைக்காட்சிகளில் தன்னை தொகுப்பாளினியாக எடுத்துக்கொள்ள மறுத்தார்கள்.
இதன்பின்னர் நான் பாடகியானேன். தற்போது ‘பாவம் கணேசன்’ தொடரில் நடித்து வருகிறேன். சபரி ஞானப்பிரகாசம் என்பவர் தன்னிடம் காதலை சொன்னார். பெற்றோரிடம் அனுமதி கேட்டேன். சபரி ஞானப்பிரகாசம் நல்ல படிப்பு படித்தவர்.
அவர் குடும்பத்தினர் அனைவருமே நல்ல படிப்பு படித்தவர்கள். அந்த நம்பிக்கையில் அவருக்கு திருமணம் செய்து கொள்ள என் பெற்றோர்கள் முன் வந்தனர். ஒரே பெண் என்பதால் எனக்கு மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.
பல திரைப்பட பிரபலங்கள் நேரில் வந்து என் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். மாமா உறவு முறையான இளையராஜா நேரில் வந்து என் திருமணத்திற்கு வாழ்த்தினார். திருமணம் வரைக்கும் நன்றாக போய்க் கொண்டிருந்த எங்கள் உறவு திருமணத்திற்கு பிறகு சில கசப்பான சம்பவங்கள் நடந்தது. காதலைச் சொன்னபோது இருந்த சபரி ஞானப் பிரகாசத்தின் குணம், திருமணத்திற்கு பிறகு கிடையாது.
அதனால் நான் ரொம்ப அதிர்ந்து அடைந்தேன். அதுமட்டுமில்லாமல் அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததும், பல மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்ததையும் கண்டு மேலும் அதிர்ந்து அடைந்தேன்.
இதனால் குடும்பத்தில் நிறைய குழப்பங்கள் வந்தது. இந்தக் குழப்பத்தில் மன உளைச்சலுக்கு நான் ஆளேன். காலம் முழுவதையும் அவருடன் வாழ எனக்கு விருப்பம் இல்லை. அதனால் சபரிஞானபிரகாசத்தை விவகாரத்து செய்ய முடிவு செய்தேன்.
இதனால் அவர் எனக்கும், என்னை சேர்ந்தவர்களுக்கும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். இது எனக்கு மிகவும் கவலையளிக்கிறது. மாமா இளையராஜாவிடம் இதுபற்றி தான் எதுவும் பேசவில்லை. மாமா என்கிற முறையில் நல்ல காரியத்திற்கு அவர் முன்னாள் போய் நிக்கலாம்.
கசப்பான காரியங்களுக்காக அவர் முன்னால் நின்று அவரை சங்கடப்படுத்த தான் விரும்பவில்லை.
இவ்வாறு அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.