Tuesday, May 13, 2025

குழந்தை இறந்ததை நினைத்து நினைத்து வேதனையில் தற்கொலை செய்து கொண்ட தாய்!

tamilnadu-samugam
By Nandhini 4 years ago
Report

திருப்பத்தூரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவுதமி (23). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கவுதமிக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு குறைப் பிரசவத்தில் குழந்தை பிறந்து இறந்து விட்டது. இதனால், அவர் மிகவும மனமுடைந்து போனார்.

இந்நிலையில், கடந்த 5ம் தேதி இரவு வீட்டில் இருந்த கவுதமி விஷத்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். மயங்கி கிடந்த இவரை உறவினர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக கவுதமி உயிரிழந்தார்.

இதுகுறித்து கவுதமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதனையடுத்து, திருமணமாகி 3 ஆண்டுகளில் கவுதமி உயிரிழந்துள்ளதால் இந்த வழக்கு திருப்பத்தூர் ஆர்.டி.ஓ விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

குழந்தை இறந்ததை நினைத்து நினைத்து வேதனையில் தற்கொலை செய்து கொண்ட தாய்! | Tamilnadu Samugam