கிருஷ்ணா மாவட்டம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

tamilnadu-samugam
By Nandhini Jul 07, 2021 12:11 PM GMT
Report

கிருஷ்ணா மாவட்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சென்னை, கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பாரம் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த லாரியில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசலு, ராஜலட்சுமி அவர்களது இரண்டு வயது மகன் ரோஹித் ஆகியோர் பயணம் செய்தனர்.

ஆனால், எதிர்பாராதவிதமாக லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கிளீனர் லாரியை ஓட்டியதே இந்த விபத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. லாரியை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 

கிருஷ்ணா மாவட்டம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி | Tamilnadu Samugam